Broccoli Poriyal Recipe

ப்ராக்கோலி பொரியல் இதுவரை எத்தனையோ முறை ப்ராக்கோலியைப் பற்றி படித்திருப்பீர்கள். ஆனால் இந்த ப்ராக்கோலியை எப்படி செய்து சாப்பிடுவது என்று பலருக்கு தெரியாமலே இருக்கும். அத்தகையவர்கள் ப்ராக்கோலி பொரியல் போன்று செய்து சாப்பிடலாம். இங்கு அந்த ப்ராக்கோலி பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு ப்ராக்கோலி பொரியல் மிகவும் பிடிக்கும். தேவையான பொருட்கள் ப்ராக்கோலி - 1 (சிறியது) வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 துருவிய வரமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவையான அளவு கடுகு - 1/2 டீஸ்பூன் தேங்காய் - 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டீ ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ப்ராக்கோலியை நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்த தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் ப்ராக்கோலி மற்றும் உப்பு சேர்த்து 3-5 நிமிடம் நன்கு வதக்கி, ப்ராக்கோலி நன்கு அடர் நிறத்தில் மாறும் போது, அதில் துருவியத் தேங்காயை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இப்பொழுது சுவையான ப்ராக்கோலி பொரியல் தயார்.
Broccoli Poriyal Recipe Broccoli Poriyal Recipe Reviewed by Abinaya on 05:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.