Pirandai Chutney,Pirandai Chutney Recipe,Pirandai Chutney Recipe

பிரண்டை சட்னி

தேவையான பொருட்கள்:

பிரண்டை - கால் கிலோ

காய்த்த மிளகாய் - 4

தேங்காய் துருவல் - கால் கப்

பூண்டு பல் - 3

சின்ன வெங்காயம் - 6

புளி - நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - அரை டீ ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

பிரண்டையை கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் பிரண்டையை அதில் போட்டு நன்கு வாதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு ஏற்படும்.

பிரண்டை நன்கு வதக்கிய உடன் அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி,பூண்டு,தேங்காய் துருவல்,அணைத்தையும் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

மிக்சியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய்யில் கடுகு, உளுந்து,கறிவேப்பிலை தாளித்து அரைத்ததை சேர்த்தால் பிரண்டை சட்னி ரெடி.

Pirandai Chutney,Pirandai Chutney Recipe,Pirandai Chutney Recipe Pirandai Chutney,Pirandai Chutney Recipe,Pirandai Chutney Recipe Reviewed by Abinaya on 17:39:00 Rating: 5

1 comment:

  1. Nice information. Thanks for sharing. Pirandai is a perennial plant of the grape family. Pirandai Chutney treats all digestion related problems like gastritis, indigestion and lack of appetite. It is a natural blood purifier. Pirandai Chutney can be made in matter of minutes and tastes really good. Kaavidesam is the Exclusive Online Store for Traditional Herbal Pirandai Powder

    ReplyDelete

Powered by Blogger.