Jamun Fruit Naaval Pazham Benefits

Jamun Fruit Naaval Pazham Benefits நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல் பழத்தில் இரு வகைகள் உண்டு. ஒன்று உருண்டை ரகம். இன்னொன்று நீள ரகம். இவற்றுள் நீள வடிவில் பெரியதாய் இருக்கும் பழவகையில்தான் இனிப்புச் சுவை அதிகம் உள்ளது. உருண்டை ரகமே மருத்துவ குணம் கொண்டது. நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது. பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் சீராக்கும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகை நோயைக் குணப்படுத்துகிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் குணப்படுத்துகிறது. சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது.

நீரிழிவு நோயை தடுக்கும் நாவல் பழம்:

இப்பழத்தை சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் நோய்கள், குடற்புண் போன்றவற்றைப் போக்க நல்லது. நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. இதனால் நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை இடித்து தூளை தினமும் ஒரு கிராம் அளவு காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர்ப்போக்குக் குறையும்.

இந்த பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முழுவதும் கட்டுப்படுத்திவிடலாம்.

குழந்தைப் பேறு தரும் :

பெண்களின் மலட்டுத் தன்மை குணப்படுத்தும், வைட்டமின் ஈ தேவை. நாவல் மர இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை தீரும்.

மூன்று இலையை விழுதாய் அரைத்து கட்டித் தயிரில் கலக்கி அதிகாலையில் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டுவர, குழந்தைப் பேறு உண்டாகும்.

நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு பிழிந்து எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர பேதியை குணப்படுத்தும். தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவடையும்.

மகிழ்ச்சி தரும் நாவல் மரம் :

பொதுவாக நாவல் மரங்களை வளர்த்தால் நல்லது. ஆனால் வீட்டில் வளர்ப்பது விசேஷம் கிடையாது. நிலங்களில் வைத்து வளர்க்கலாம். நாவல் மரங்களைத் தேடி கரு வண்டுகள் அதிகமாக வரும். அந்த மரத்திலிருந்து வெளிப்படக்கூடிய அலைவீச்சு, அதனுடைய காற்றின் குளிர்ச்சி போன்றவை இவைகளை ஈர்க்கும். அதனால் இதனை வீடுகளில் வளர்க்காமல், விளை நிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் வளர்ப்பது நல்லது. அந்தக் காற்று உடலிற்கும் நல்லது, மகிழ்ச்சியும் தரும்.

Jamun Fruit Naaval Pazham Benefits Jamun Fruit Naaval Pazham Benefits Reviewed by Abinaya on 19:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.