Banana Fry Recipes

வாழைக்காய் ஃப்ரை

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :

வாழைக்காயின் தோலை நீக்கி விட்டு வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய வாழைக்காயை வாணலியில் தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும்.

பின் வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேவையான உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிறகு வேக வைத்த வாழைக்காயை தண்ணீர் வடித்து இதில் சேர்க்கவும்.

2 நிமிடம் கிளறிவிட்டு இறக்கவும்.

சுவையான வாழைக்காய் ஃப்ரை ரெடி.

Banana Fry Recipes Banana Fry Recipes Reviewed by Abinaya on 09:04:00 Rating: 5

No comments:

Powered by Blogger.